இந்தியாவில் சிறுமியை பண்ணையில் வைத்து சீரழித்த 70 வயது தாத்தா கைது
இந்தியா-மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது நபரை
போலீஸார் கைது செய்தனர்.
ஹிங்கினி பத்ருக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான தாமோதர் ஹிம்தாஜி டோங்கரே என்பவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது பண்ணை வீட்டுக்கு அழைத்தார். பின்னர் பண்ணை வீட்டின் ஒதுக்குப்புறமாக வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அச்சிறுமியின் உறவினர் ஓடி வந்து பார்த்தபோது தாத்தா செய்து கொண்டிருந்த அக்கிரமம் தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர், தாத்தாவிடமிருந்து சிறுமியை மீட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்த காமத் தாத்தாவைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக