திருகோணமலையில் சிறிமியின் உதட்டை கடித்த 47 வயதுடைய நபர்
திருகோணமலை மொறவௌ பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறிமியின் உதட்டை கடித்த 47 வயதுடைய நபரொருபரை கைது செய்துள்ளதாக பொலீஸ் பொறுப்பதிகாரி தம்மிக்க
விஜேசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு பெண் பிள்ளையின் தந்தையான செனவிரத்ன பண்டார (47) நாமல்வத்த மொறவௌ பகுதியைச் சேர்ந்தவராவார்.
தனது தாய் குருநாகல் சென்று விட்டதாகவும் தந்தை தொழிலுக்க சென்றுள்ள போது தான் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தேன் அப்போது தான் அந்நபர் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில் அவர் உதட்டை கடித்தார் என பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்தனர்.
தற்பொழுது சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை மருத்துவ பரிசோதனை பெற்ற பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
12 வயதான சிறுமியை பாதிப்புக்குள்ளாக்கிய சந்தேகநபரை எதிர் வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக