பிரித்தானியாவில் சாகசப் படகு கவிழ்ந்து தந்தை- மகள் பலி
லண்டனை ஒட்டியுள்ள கார்ன்வால் கடற்பரப்பில் லண்டனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தங்களுக்குச் சொந்தமான அதிவேக மோட்டார் படகில் நேற்று கடலில் உல்லாச சவாரி
புறப்பட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த படகு விபத்துக்குள்ளானது.
படகில் இருந்து 51 வயது தந்தையும், 8 வயது மகளும், இந்த விபத்தில் உயிரிழந்தனர். மற்ற நால்வரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகில் அடிபட்டதன் மூலம், அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பியவர்களில் 39 வயதுப் பெண் ஒருவரும், நான்கு வயதுடைய சிறுவன் ஒருவனும், 10, 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் அடங்குவர்.
விபத்து நடைபெற்றபோது அருகில் இருந்தவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் பேரில், விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரியான ஜிம் கால்வெல் கூறினார். அவர்களுக்கு ஏற்பட்ட விபத்து ஆபத்தான ஒன்று என்றும், வாழ்க்கையையே திசைதிருப்பக்கூடிய ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக