அமெரிக்காவில் நாயை கடித்த மனிதர்
நாய் மனிதனை கடிப்பது சகஜமானது. ஆனால் மனிதன் நாயை கடித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் லோவா
மாகாணத்தில் உள்ள பல்லாஸ் நகரை சேர்ந்தவர் கேரன். இவரது மனைவி லைனி ஹென்றி.
சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் தங்களது செல்ல நாயுடன் டல்லாஸ் நகரில் வாக்கிங் சென்றனர். அப்போது, ரோட்டோரம் சுற்றி திரிந்த 23 கிலோ லாபிரேடர் நாய் திடீரென பாய்ந்து வந்து லைனி ஹென்றியை கடித்து குதறியது.
அவரது தொடை, இடுப்பு பகுதியில் கடித்த அந்த நாய் அவரை கீழே தள்ளியது. மேலும், அவரது முகத்தில் கால்களால் பிராண்டியது. ஹென்றியின் மூக்கையும் கடித்து தேசப்படுத்தியது.
இதற்கிடையே, நாயிடம் சிக்கிய தனது மனைவியை காப்பாற்ற கேரனும் கடுமையாக போராடினார். ஆனாலும் முடியவில்லை. ஹென்றியின் குரல் வளையில் கடித்து அவரது ரத்தத்தை குடிக்க அந்த நாய் முயற்சி செய்தது.
உடனே, தனது மனைவியை காப்பாற்ற கேரன் லாபிரேடர் நாயை கடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் ஹென்றியை விட்டு நாய் ஓட்டம் பிடித்தது.
இதற்கிடையே, நாய் கடித்ததில் உடலில் பலத்த காயம் அடைந்த ஹென்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நாய் கடித்ததில் அவரது மூக்கில் சதைகள் இன்றி தேசம் அடைந்திருந்தது. அந்த இடத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சரி செய்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஹென்றியை கடித்து குதறிய நாயை 14 நாட்கள் அடைத்து வைக்க உத்தரவிட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக