அமெரிக்காவில் கார் தீ விபத்தில் ஐந்து இளம் பெண்கள் பலி
அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண்கள் 10 பேர் லிமாசின் காரில் பயணம் மேற்கொண்டனர். சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள சான் மாட்டி ஆற்றுப்பாலம்
வழியாக சென்ற போது காரில் பின்பகுதி தீப்பிடித்தது.
சுதாரிப்பதற்குள் மளமளவென பரவிய தீ, காரில் இருந்த 5 பெண்களை தீக்கிரையாக்கியது. உடனடியாக ஆற்றுப்பாலத்தின் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. அப்பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் மற்ற 5 பேரையும் காயங்களுடன் மீட்டனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக