புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொக்கில் பகுதியில் தந்தையால் துன்புறுத்தப்பட்ட நான்கு பிள்ளைகள் பத்தனை பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளனர்.


பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டிற்கு பத்தனை பொலிஸார் சென்ற பொழுது இந்த நான்கு பிள்ளைகளும் பட்டினியுடன் இருந்துள்ளனர்.

இவர்கள் 6 வயது தொடக்கம் 13 வயது வரையுடைய மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் விசாரணை செய்த பொழுது தாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தந்தை வேலைக்கு செல்லாமல் தாய் அனுப்பும் பணத்தில் குடித்து விட்டு வந்து தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமக்கு சரியான உணவு கிடைப்பதில்லை எனவும் சில சந்தர்ப்பங்களில் அயலவர்கள் கொடுக்கும் உணவை தாம் உட்கொண்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட தந்தையையும் தாம் கைது செய்துள்ளதுடன் பிள்ளைகளையும் தந்தையையும் அட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top