இந்தியாவில் காதலிக்கு உருட்டு கட்டையால் அடித்த காதலன்
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் புதூரில் காதலனைத் தேடி வந்த காதலிக்கு உருட்டுக் கட்டை அடி விழுந்தது. சரமாரியாக அவர் தாக்கப்பட்டார். இதையடுத்து காதலன்
குடும்பத்தினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பாண்டிச்செல்வி. 23 வயதான இவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றுகிறார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் புதூரைச் சேர்ந்த கண்ணன் என்ற 25 வயது வாலிபர் சிகிச்சைக்காக பாண்டிசெல்வி பணியாற்றும் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்வதாக கண்ணன் வாக்குறுதி அளித்தார். கடந்த 5 வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கண்ணனுக்கு அவரது வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தனர். ஏற்பாடுகளும் நடப்பதாக செல்விக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அவர் ராஜகம்பீரம் புதூர் வந்தார்.
அப்போது பாண்டிச்செல்விக்கு எந்தப் பதிலையும்சொல்லாமல்இரவு வரை காக்க வைத்துள்ளளனர் கண்ணன் குடும்பத்தார். இரவில் பாண்டிச்செல்வியை கண்ணன், அவரது சகோதரிலட்சுமி, அவரது கணவர் உள்ளிட்டோர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர் நேற்று இரவு ஆட்டோவில் ஏற்றி மானாமதுரை பைபாஸ்சாலையில் தள்ளிவிட்டு 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து விட்டு தப்பி விட்டனர்.
தற்போது பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக