புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் திரைப்பட ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த, சிம்ரனை, திருமணத்துக்கு பின், கோலிவுட் ஓரம் கட்டியது. இதனால், சிறிதும் மனம் தளராத சிம்ரன், ஒரு சில படங்களில் நடித்தார்.


பெரிய அளவில், வரவேற்பு இல்லை. இதனால், மக்களிடம், "டச் விட்டுப் போகாமல் இருப்பதற்காக, "டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.தற்போது, ஒரு சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்துள்ளார்.

கவுதம் மேனன், அடுத்து இயக்கப் போகும், "துருவ நட்சத்திரம் என்ற படத்தில், சிம்ரனுக்கு முக்கிய வேடமாம். இந்த படத்தில், பார்த்திபனும், முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது இன்னிங்ஸ், தனக்கு நன்றாகவே கை கொடுக்கும் என, உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார், சிம்ரன்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top