பிரித்தானியாவில் கத்தரிக்காயில் கணபதி -படங்கள்
லண்டனில் உள்ள லிசெஸ்டர் என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் பிரபுல் விஸ்ராம் (61). இவர் சமையல் தொழிலும் செய்து வருகிறார்.
சமையலுக்கு பயன்படுத்த கத்தரிக்காய் வாங்கி இருந்தார். இதில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்தது. அதை அவரது மனைவி ரேகா பார்த்து விஸ்ராமிடம் தெரிவித்தார்.
இதனால் உள்ளம் மகிழ்ந்த விஸ்ராம் குடும்பத்தினர் அந்த கத்தரிக்காயை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் அதை அருகில் இருந்த கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர்.
இதற்கிடையே அதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தங்கியிருக்கும் இந்துக்கள் திரளாக கோவிலுக்கு படையெடுத்தனர். பக்தி பரவசத்துடன் அந்த கத்தரிக்காயை வணங்கி பூஜை செய்தனர்.
இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தொழில் அதிபர் பிரபுல் விஸ்ராம் கூறும்போது,
´´கத்தரிக்காயில் விநாயகர் உருவம் தெரிந்ததை என் மனைவி ரேகாதான் முதலில் பார்த்தார். உடனே நாங்கள் அதை பயபக்தியுடன் வணங்கி கோவிலுக்கு எடுத்து சென்றோம்.
இந்த கத்தரிக்காய் எங்களுக்கு கிடைத்ததை மிகப்பெரும் ஆசியாக கருதுகிறோம். இது எங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரும் என நம்புகிறேன்´´ என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக