புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது


இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.

திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் "ரூம்" போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள்.

எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு ரகளையிலும் ஈடுபட்டார்.

தயாரிப்பு நிர்வாகிகளிடமும் ஆவேசமாக பேசி சண்டை போட்டாராம். ஆனால் படக்குழுவினர் ஒரு ரூம் தான் ஒதுக்க முடியும் என பிடிவாதமாக கூறினார்களாம். இதையடுத்து ரூமில் தங்க முடியாது என அடம் பிடித்து படப்பிடிப்புக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.

திரிஷா ரகளையால் ஓட்டல் ஊழியர்களும் அங்கு திரண்டார்கள். தகவல் அறிந்து இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் அங்கு விரைந்தனர்.

திரிஷாவை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். அவர் விருப்பப்படியே தாய்க்கு தனி ரூம் போட்டு கொடுத்தனர். அதன் பிறகு திரிஷா அமைதியானார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top