சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ் இளைஞன் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியை கடத்தி நொச்சியாகம பிரதேசத்திற்குச் சென்று கணவன் - மனைவியாக வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பாட்டிக்கு சொந்தமான காணியிலேயே தான் வீடொன்றை அமைத்து குடியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பே பிரதேசத்தில் உள்ள சட்டத்தரணி ஒருவர் முன் ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்ட பின்னரே தான் இந்த சிறுமியுடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வருவதாக கைது செய்யப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் தற்போது பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை எனவும், சிறுமி திருமண வயதை அடைந்ததன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக தாங்கள் இருவரும் தீர்மானித்துள்ளதாக அவ் இளைஞன் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் திருமண வயதை அடையாத சிறுமி ஒருவருடன் கணவன் - மனைவியாக வாழ்வது சட்டவிரோதமானது என கூறிய மாதும்பே பொலிஸார் அவ் இளைஞனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக