புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குவைத்திலிருந்து வீட்டு எஜமானரின் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி காயங்களுக்குள்ளாகியுள்ள  மற்றுமொரு இலங்கை தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
கொழும்பு 14, மாதம்பிட்டி, பகுதியைச் சேர்ந்த 33
வயதான திருப்பதி ஸ்ரீதேவி என்ற பெண்ணே பலத்த காயங்களுடன் நாடு திரும்பியுள்ளார்.

இவர் தற்போது தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஜமானரின் தாக்குதலால் இவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனியவிடம் வினவியபோது,

சம்பந்தப்பட்ட பணிப்பெண் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரிவித்தார்.

1 கருத்து:

 
Top