புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கும் பணியில் மும்முரமாக உள்ளார். கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய
படத்துக்கு வை ராஜா வை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கடல் படத்தில் நாயகனாக நடித்த கவுதம் கார்த்திக்தான் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற கலைஞர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் முதல் படம் 3. தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நடித்த அந்தப் படம் மிகப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி தோல்வியைச் சந்தித்தது.

இப்போது எந்த பெரிய அறிவிப்போ, பரபரப்போ இல்லாமல் தனது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ´இந்தப் படம் ரசிகர்களைக் கவரும் வகையில் அமையும்," என்று அடக்கமாக சொல்லிவிட்டு, வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top