புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும்
எஸ்பெரன்ஸ் பிசிமான மற்றும் பிரிடிலே பிசிமான என்ற தம்பதியரின் பாலகனே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இதே பெற்றோரின் 8 வயது சிறுவன் வளர்ப்பு வீட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி தம்பதியர் தமது நான்கு பிள்ளைகளுடன் நோர்வேயின் டர்மென் இல் வசித்து வந்த சந்தர்ப்பத்தில் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவர்களது 13,11,08 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளை நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமாக எடுத்து சென்றுள்ளது.

இது இவ்வாறிருக்க இந்த தம்பதியருக்கு 05 ஆவதாக பிறந்த குழந்தையையும் இரண்டு நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் இருந்தவாறே தாயிடமிருற்து பலவந்தமாக பறித்து செல்லப்பட்ட துயரச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தற்போது தமது ஐந்து பிள்ளைகளையும் நோர்வே சிறுவர் காப்பகத்திடம் பறிகொடுத்து தவிர்ப்பதாகவும் தற்போது சுமார் நான்கு மாதங்களே ஆன தமது ஐந்தாவது குழந்தையை நினைத்து மனமொடிந்து போயிருப்பதாகவும் குழந்தையின் தாயாரான பிடிலா பிசிமான தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலிருந்து எங்களது மனோநிலை எவ்வாறு இருக்கும் என்பதை மனிதாபிமானிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அந்தப் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதே நோர்வே காப்பகத்தில் கவர்ந்து செல்லப்பட்ட தமது 8 வயது மகன் பாலியல் துன்புறுத்த்களுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் தமது குழந்தைகளை மீட்டுத்தறுவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top