கடந்த வருடத்திற்குள் மட்டும் 15,000 புற்று நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புற்று நோயாளர்களுக்காக 150 கோடி ரூபா செலவில் மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவ்அமைச்சு தெரிவித்துள்ளது.
புற்று நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள் கொள்வனவு தொடர்பில் வாரம் ஒன்றிற்கு 50 - 60 அறிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
இவற்றினை சுகாதார அமைச்சர் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்குள் புற்று நோயாளர்களுக்கு அவசியமான மருந்துப் பொருட்களுக்கான நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக