புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2.8 கிலோமீற்றர் நீள குகைப்பாதை உள்ளது. இந்த பாதையில் நேற்று பிற்பகம் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது.


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

இந்த பெண்ணின் கணவரும், மகனும் பலத்த காயம் அடைந்தனர். அப்போது அவர்களை கடந்து பல வாகனங்கள் சென்றன.

மனைவி மற்றும் மகளின் உடல்கள் அருகே வலியால் துடித்துக்கொண்டிருந்த மகனை கையில் பிடித்தபடி, தனக்கு உதவி செய்யும்படி அந்த நபர் கத்தியும் எவரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.

கண்கணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியர்களும் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தகவல் தெரிவித்திருந்தால், அந்த நபரின் மனைவியை காப்பாற்றியிருக்க முடியும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top