புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் இணைந்து நடிக்கும் வாலு படத்தின் தலைப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிர்ந்து போயுள்ளார் நாயகன் சிம்பு.

தற்போது வேட்டை மன்னன் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அதற்கு முன்னதாக வாலு படத்தைதான் வெளியிடவிருந்தார்.

ஆனால், திடீரென்று அதே தலைப்பை நாங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று ஒரு பட நிறுவனம் கொடி பிடித்ததால், அதிர்ந்து போன சிம்பு வாலு பட வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வேட்டை மன்னனில் இறங்கி விட்டார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக வாலு படத்தில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்த வாலுவில் சிம்புதானே இருக்க வேண்டும் என்று பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் சிம்பு படம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு நடிகரின் படம் இருந்ததால் ரசிகர்கள் குழம்பிப் போயியுள்ளனர்.

ஆக, இரண்டு பட நிறுவனங்களுமே நாங்கள் தான் வாலு தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளோம் என்று கூறியபடி கொடி பிடித்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த பிரச்னையை தீர்க்க தயாரிப்பாளர் சங்கத்தை நாடுவதா? இல்லை கோர்ட்டுக்கு செல்வதாக என்று இரண்டு நிறுவனங்களுமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top