புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி  அதனை வீடியோ பதிவுசெய்து கொண்டது மட்டுமல்லாது அந்த வீடியோவை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக மாணவியிடம் கப்பம் கேட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் கம்பஹாவிலேயே இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கம்பஹாவில் பிரபல மகளிர் வித்தியாலயத்தில் 13 ஆம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியுடன் குறித்த பிரத்தியேகவகுப்பு ஆசிரியர் காதல் கொண்டிருந்ததுடன் மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி அதனை வீடியோவும் எடுத்துள்ளார். அத்துடன் அந்த வீடியோவை இணையத்தளங்களின் ஊடாக அம்பலப்படுத்துவதாக மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.

அதனை தடுத்து நிறுத்தவேண்டுமாயின் தனக்கு 5 இலட்சம் ரூபாவை கப்பமாக தருமாறும் மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தெரிந்துக்கொண்ட பாடசாலையின் அதிபர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே பிரத்தியேக வகுப்பின் ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top