கொலிவுட்டில் அந்நியன் படத்திற்கு பின்பு சியான் விக்ரம், ஷங்கர் கூட்டணியில் தயாராகும் படம் ஐ.
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம் இருவேறு தோற்றங்களில் வருகிறார். அதில் ஒரு பகுதியில் உடல் பருமனான தோற்றத்திலும் மற்றொரு பகுதியில் உடல் மெலிந்த தோற்றத்திலும் நடிக்கிறார்.
முதலில் உடல் பருமன் கொண்ட விக்ரம் சம்மந்தப்பட் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக உடல் மெலிந்த தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார்.
இதற்காக விக்ரம் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்திற்காக 8 கிலோ எடையை குறைத்த அவர் மீண்டும் 5 கிலோ குறைக்க சீனா சென்றிருக்கிறார்.
அங்கிருந்து மே முதல் வாரத்தில் மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே 'ஐ' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக