புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாயை குறைகூற அவசர பொலிஸை அழைத்த அமெரிக்காவின் வெரோ பீச் நகரைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வின்சென்ட் வல்வொ என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞன் 911 என்ற அவசர இலக்கத்தின் மூலம் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு தாயின் பேச்சு தொந்தரவளிப்பதாகவும் அவரை கைது செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் இனி இவ்வாறான அநாவசியமான பிரச்சினைகளுக்காக அவசர பொலிஸாரை அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் மறுபடியும் இரண்டாவது முறையாகவும் அவசர பொலிஸை வின்சென்ட் தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்ந்து பொலிஸார் வின்சென்டின் வீட்டிற்கு வந்து அவரை அவசர பொலிஸ் உதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். பின்னர் மாலை வரையில் பொலிஸ் காவலில் இருந்த வின்சென்ட் 500 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்தி விடுதலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top