புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கொல்த்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கம்பீர், யூசுப் பதான் தலா 25 ஓட்டங்கள் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஐடேஜா 3 விக்கெட்டுகளும், அஷ்வின் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

120 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரார் அஷ்வின், பின்னர் விளையாடிய முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, தலைவர் தோனி, பத்ரிநாத் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

சீரான வேகத்தில் ஓட்டங்கள் சேகரித்த ஹசி 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

ஐடேஜா 14 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் கடைசி கட்டத்தில் சிக்சர்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ள சென்னை அணி 8 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top