காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 6 மாதக் பெண் குழந்தையென்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவத்தில் மாதகல் சகாயபுரத்தைச் சேர்ந்த வி.திசானா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இக்குழந்தை சில நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுக் காலை குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானதால் பேருந்தில் குழந்தையை அவசர அவசரமாக தாயார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.
வைத்தியசாலைக்கு குழந்தையைக் கொண்டு வந்தபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்பின்னர் குழந்தையை பரிசோதனை செய்த வைத்தியர் குழந்தை பேருந்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக