யாழ் கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோப்பாய் பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.