புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப் போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட் படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யுவதி அவரது பெற்றோருடன் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தயாரிப்பாளரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
Top