அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் ஆறு கிலோ கிராம் கஞ்சா எடுத்துச் சென்ற நபர்
ஒருவரை நேற்றுமுன்தினம் திஸ்ஸமகாராமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பஸ்ஸை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார் கோணியில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற 6 கிலோ கஞ்சாவினை கண்டு பிடித்துள்ளனர்.