சவுதியில், ஈரானுக்காக உளவு பார்த்ததாக கூறி 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய இருவரில் ஒருவர் லெபனானையும், துருக்கியையும்
சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மாத்திரம் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 19ம் திகதி சவுதியைச் சேர்ந்த 16 பேர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் அனைவரும் ஈரானின் புலனாய்வு அமைப்பினருடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சவுதி மட்டும் ஈரான் இடையேயான உறவுகள் நீண்ட நாட்களாக சுமூகமான நிலையில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.