புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா -மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.


உடனே அங்கு சென்ற மக்கள், பள்ளி மாணவி உடல் முழுக்க எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எரிந்த நிலையில் இருந்த அந்த பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கிருந்து கத்தி, கேக்குகள், மது பாட்டில்கள், எரிந்த நிலையில் கிடந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி வியாழன் மாலை 3 மணி அளவில் காணமல் போனாது தெரியவந்தது.

அவள் காணமல் போனது பற்றி அவளது பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்து இருப்பதும் தெரிவித்து இருந்தனர். கற்பழித்து எரிக்கப்பட்ட அந்த மாணவி, உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதால் வாக்குமூலம் எதுவும் கிடைக்கவில்லை.

சம்பவம் நடந்த அந்த கட்டிடப்பகுதியில் சமூக விரோத கும்பல்களில் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Top