புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காவல் நிலையத்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடமலைக் குண்டு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தேனி பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் துளசி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக கடமலைகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்று இரவு காவல் நிலையத்தில் ரமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் அமுதன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் திருட்டு வழக்கில் காவல்துறை ரமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சிபிசிஐடியினர் விசாரிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, சிபிசிஐடி விசாரிக்க கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், கடமலைகுண்டு ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார், எஸ்ஐ அமுதன் ஆகியோர் மீது பெண்கள் வன்முறை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கதிர் தெரிவித்தார்.
 
Top