கிண்ணியா மஃரூப் நகரினை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்யும் போதே ஊசியொன்று வைத்து தைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22ம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.