புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரன இலங்கையர் ஒருவர் சைப்பரஸில் கைது செய்யப்டப்டுள்ளார். அவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்பிரஸ்
நாட்டின் காவற்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைப்பிரஸில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக, அந்த நாட்டு குடியுரிமை கொண்டவர்களை சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்யும் வழக்கம் தொடர்ந்தும் நிலவுகிறது.

இந்த அடிப்படையில் பங்களாதேஸை சேர்ந்த ஒருவர், சைப்பிரஸ் குடியுரிமை கொண்ட தமது காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முற்படும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
Top