புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உள்நாட்டில் போலி வைத்தியர்களை கைதுசெய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை
முன்னெடுக்கவுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு நபர்கள் ஆயுர்வேத வைத்தியர்கள் எனத் தெரிவித்து, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக தமக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் பாலித்த வீரகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான வைத்தியர்கள் தொடர்பான தகவல்களை 0112 89 69 11 அல்லது 0112 89 69 12 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.

ஆயுர்வேத சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு தேசிய வைத்தியர்கள் தொடர்பில் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் பாலித்த வீரக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top