புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சொத்துக்களை அபகரிப்பதற்காக தந்தையை கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்க முயன்ற மகனின் திட்டம் தவிடுபொடியானது.



டெல்லி நிஜாமுதீன் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர், அழுத கண்களுடனும், இழுத்துப் போர்த்திய சேலையுடனும் வந்தார்.

அங்கிருந்த பொலிஸ்காரர்களிடம் பேருந்துக்காக காத்து நின்ற என்னை, காரில் வந்த ஒருவர் காருக்குள் இழுத்துப்போட்டு பலாத்காரம் செய்ய முயன்றார், அவரிடம் இருந்து தப்பி வந்தேன் என கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார், உடனடியாக விசாரணையை தொடங்கினர். அந்தப் பெண் அளித்த புகாரில், கடத்தப்பட்ட காரின் எண், வண்ணம், கடத்திய நபரின் உருவ அமைப்பு, வயது போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டதால், அசோக்(வயது 60) என்பவரின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

தன் மீது அந்தப் பெண் கொடுத்த புகாரை கேட்டு, அதிர்ச்சி அடைந்த அசோக், அந்த பெண்ணிடம், நானா உன்னை பலாத்காரம் செய்தேன்? என கேட்டார்.

ஆமாம், நீங்கள் தான் என அந்தப் பெண் கூறினார். எனினும் அந்தப் பெண்ணிடம் தடுமாற்றம் காணப்பட்டதை உணர்ந்த பொலிசார் அவளின் கணவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அந்த நபரைப் பார்த்ததும், நீ என் மகன் ஹர்கேஷ் நண்பன், ஹசன் தானே? இவள் உன் மனைவியா? என கேட்கவும், அதிர்ச்சி அடைந்த அந்த நபர், முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

அந்த நபரிடம் பொலிசார் முறைப்படி விசாரித்த போது, அசோக்கின் மகன் ஹர்கேஷ் கேட்டுக் கொண்டதன்படி பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது.

காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஹர்கேஷ்(வயது 28)தன் திட்டம் தோல்வி அடைந்ததை எண்ணி, இனிமேல் தப்பிக்க முடியாது என கருதி உண்மையை ஒப்புக் கொண்டான்.

அப்பாவின் சொத்துகளையும், தொழில்களையும் கைப்பற்ற நண்பர்களுடன் சேர்ந்து கற்பழிப்பு புகார் கொடுக்க ஏற்பாடு செய்ததை விவரித்தான்.

இதையடுத்து ஹர்கேஷ், ஹசன், அவன் மனைவியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top