புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் 5 வயது பள்ளிச் சிறுவனுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள், புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆனைமலை பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியரின் மகன் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுவனின் தந்தை வேட்டைக் காரன்புதூரில் உள்ள தனது உறவினர் சுப்பிரமணியம் என்பவரது வீட்டில் சிறுவனை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

சம்பவத்தன்று மாலை சிறுவன் அதே பகுதியிலுள்ள கன்னிமுத்து (26) என்பவரது வீட்டிற்கு விளையாட சென்றான். அப்போது குப்பிச்சபுதூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மதன்குமார்(20) என்பவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புதர் நிறைந்த வாய்க்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த கன்னிமுத்து என்ற வாலிபரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இதனையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி வந்து தனது தாத்தாவிடம் நடந்த சம்பவங்களை கூறியதை தொடர்ந்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், கன்னிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top