புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் கரூரில் சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து விட்டு, பின்னர் போலீசில் புகார் அளித்து நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவர் 2011ம் ஆண்டு கொலை
செய்யப்பட்டார்.

இவரது மனைவி சாவித்ரி (55). இவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு பன்னீர்செல்வம், பாபு(33) என்ற மகன்கள் உள்ளனர். 2 பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி அதிகாலை விவிஜி நகர் வீட்டில் இருந்த சாவித்ரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசில் பாபு அளித்த புகாரில், தனது தந்தை கொலை வழக்கில் தாய் சாவித்ரி சாட்சியாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அவர் சாட்சி சொல்வதை தடுக்க கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் திடீர் திருப்பமாக சாவித்ரியை அவரது மகன் பாபுவே கொலை செய்தது தெரியவந்தது. சென்னிமலையில் உள்ள பூர்வீக வீட்டை விற்று பணம் தரும்படி பாபு தாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு சாவித்ரி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாபு தாயின் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் போலீசை திசைதிருப்புவதற்காக புகார் கொடுத்து நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாபு நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top