புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்ட விஜயநகர் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திர குமார் வெர்மா, 45. கடந்த 2009-ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.


அப்போது குடும்பத்தில் ஏற்பட்ட பணப்பற்றாக்குறை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது 9 மாத குழந்தை முதல் 13 வயது வரையிலான 5 குழந்தைகளை கொடூரமாக தாக்கி கொன்றார். பின்னர் அவரது மனைவியையும் தாக்கினார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இதுகுறித்த வழக்கில் இன்று காசியாபாத் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ரவீந்திர குமார் வெர்மாவுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி அருண் சாந்த் ஸ்ரீவாஸ்தாவ் தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top