புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் தொலைபேசி இலக்கத்தை தருமாறு தொந்தரவு செய்த வர்த்தகருக்கு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உதிரிப்பாகம் விற்பனை செய்யும் 50 வயது மதிக்கத்தக்க வர்த்தகர் ஒருவர் நேற்று (26) திருமண வீடொன்றில் கலந்து கொண்டிருந்த சமயம் அங்கு வந்திருந்த பெண்ணை தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து தொலைபேசி இலக்கத்தை தருமாறு கோரியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் திருமண வீட்டில் அவரை எச்சரித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக முற்சக்கர வண்டியொன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இச் சமயம் அவ் வர்த்தகர் முற்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வருவதை அவதானித்த பெண் தனது வீட்டில் இருந்த உறவினர்களிடம் முறையிட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு அவ் வர்த்தகரை மடக்கி பிடித்து பலமாக தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக வர்த்தகர் கை விரலில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் இளைஞர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top