புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாய்ப் பாசத்தின் உன்னதத்தை காட்டக் கூடிய செய்தி இது.குருவிட்ட என்கிற இடத்தைச் சேர்ந்தவர் 83 வயது உடைய பொடி நோனா. இவருக்கு எட்டு பிள்ளைகள்.


முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் 57, 52 வயது. ஆனால் இருவரும் இப்போது வரை தோற்றத்தில் குழந்தைகளாகவே உள்ளனர்.

குழந்தைகளுக்கு உரியனவாகவே இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மூத்தவர் பெண். ஆரோக்கியமான குழந்தையாகவே பிறந்து இருக்கின்றார். ஆனால் இரண்டு வயதில் இவருக்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டு விட்டது. இவரை முற்ற்லிம் வலது குறைந்தவர் ஆக்கி விட்டது. வளர்ச்சி முடங்கி விட்டது.

மற்றவர் ஆண். இவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டு விட்டது. வைத்தியர்களால் இவர்களின் நோயை அடையாளம் காணவே முடியவில்லை. கை விரித்து விட்டார்கள்.

ஆனால் இவர்களின் சகோதரர்கள் ஏனையோரைப் போலவே சாதாரணமானவர்களாக உள்ளனர்.

பொடி நோனாவின் கணவர் குணதாச. கடந்த வருடம் 87 ஆவது வயதில் இறந்து விட்டார்.

இருவரும் இரு பிள்ளைகளையும் பராமரித்து வந்திருக்கின்றார்கள். இதை ஒரு கடமையாகவே கருதி மேற்கொண்டு வந்திருக்கின்றார் குணதாச.

இப்போது பொடி நோனாதான் இப்பிள்ளைகளை தனியாக கவனித்து வருகின்றார். ஏனைய பிள்ளைகள் சொந்த விடயங்களில் மிக மும்முரமாக இருந்து வருகின்றனர்.

மூப்பு காரணமாக பொடி நோனா எந்நேரமும் இறக்க நேரலாம். அதற்கு பின் இரு குழந்தைகளின் நிலை இன்னமும் பரிதாபம் ஆகி விடும்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top