புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவில் குரங்கினம் வசிப்பதற்கு ஏற்ப சீதோசன நிலையில்லாததால் குரங்குகளைப் பார்ப்பதே மிருகக் காட்சிச்சாலையில் மாத்திரமாவேஇருந்தது.இந்நிலையில் இன்று ரொறன்ரோ ஊடகங்களைக் கவர்ந்த செய்தி யாதெனில் குரங்கு ரொறன்ரோவில்
தப்பியோடியதே.

ஐகியா என்ற தளபாட அங்காடியொன்றின் தரிப்பிடத்தில் மேற்படி குரங்கை சட்டவிரோதமாக வளர்த்து வந்தவருக்குத் தெரியாமல் மேற்படி குரங்கு காரிலிருந்து தப்பி விட்டது.இப்படித் தப்பிய குரங்கு குளிர்காலத்திற்குரிய அங்கியுடனும், டயபர் என்ற கீழங்கியுடனும் அங்குமிங்குமாக ஓடித் திரிய ஆரம்பித்தது.

பலருக்கும் புதினமாக இருந்ததோடு ஓடியோடிப் படமும் எடுக்க ஆரம்பித்தனர்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என்று அந்த அங்காடிக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் தெரிவித்தார்.

இன்னொருவரோ, ஒரு பூனையின் அளவையுடைய இந்தக் குரங்கு பலரையும் பார்த்ததும் பயப்பட ஆரம்பித்து விட்டது என்றார்.இறுதியாக கடையின் ஒரு மூலைக்குள் அடக்கப்பட்ட இந்தக் குரங்கை மிருகப் பாதுகாப்பு அமைப்பினர் வந்து கொண்டு சென்றனர்.வளர்த்தவருக்கு இவ்வளவும் நடந்த பின்பு தான் விடயமே தெரியும். எனவே அவர் மிருகப்பாதுகாப்பு அமைப்புடன் தொடர்பு கொண்டு அங்கு சென்றார்.

எனினும் குரங்கு வளர்ப்பது சட்;டவிரோதமாதலால் அவருக்கு 200 டொலர்கள் தண்டப்பணத்தை விதித்த மிருகப்பாதுகாப்பு அமைப்பினர் குரங்கையும் உரிமையாளரிடம் மீண்டும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top