புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐரோப்பா உட்பட கிழக்காசிய நாட்டினர், நாளை திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ம் எண்ணில் வருவதை அதிர்ஷ்ட நாளாக கருதுவதால் இந்நாளில் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.

இவர்கள் இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் நினைப்பதால் திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

எனவே பல நாடுகளிலும் நாளை ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சிங்கப்பூர், ஹொங்ஹாங், தாய்லாந்து போன்ற நாடுகளில் நாளைய தினத்தில் திருமணம் செய்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஹொங்ஹாங்கில் மட்டுமே நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

இது தவிர சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் நாளை திருமணம் செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top