புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கல்லூரி மாணவிக்கு மின்னஞ்சலில் ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்த சென்னை வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த விஜயகுமாரின் மகள், அங்குள்ள கல்லூரியில் பிஹெச்.டி. படித்து வருகிறார்.

இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தனது பயோடேட்டாவை அனுப்பியிருந்தார்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தினகர பிரசாத்(வயது 37) என்பவர் தஞ்சை மாணவியை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

எங்கள் நிறுவனத்துக்கு இன்னும் அதிகமான ஆட்கள் தேவை, உங்கள் தோழிகள் இருந்தால் அவர்களையும் பயோடேட்டா அனுப்ப சொல்லுங்கள் என கூறியுள்ளார். அதன்படி அந்த மாணவியும் பலரிடம் கூறினார்.

அதன்பின்பு தினகர பிரசாத், தஞ்சை மாணவியிடம் போன் செய்து நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு தஞ்சை மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், தினகர பிரசாத் தினமும் போனில் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார்.

இவ்விடயத்தை மாணவி கண்டித்தநிலையில் கடந்த மாதம் மாணவிக்கு ஆபாச படங்கள் வந்தது.

இதை பார்த்து பதறிப்போன மாணவி பிரசாத்தை எச்சரித்தார். அதற்கு அவர் என்னை திருமணம் செய்யாவிட்டால் இன்னும் என்ன நடக்கிறது பார் என கூறி மிரட்டியுள்ளார்.

சில நாட்கள் கழித்து மாணவியின் தோழிகளின் மின்னஞ்சலுக்கும் ஆபாச படங்கள், நிர்வாண படங்கள் வந்தது.

அந்த படங்கள் அனைத்தும் குறித்த மாணவியின் மின்னஞ்சலிருந்து அனுப்பப்பட்டது போல அனுப்பப்பட்டு உள்ளது.

இதற்காக அவர் மாணவியின் பயோடேட்டா, போட்டோவைக்கொண்டு ஒரு போலி மின்னஞ்சல் உருவாக்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இது தவிர, திருச்சியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கும், மாணவி படிக்கும் கல்லூரிக்கும் படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அதனால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியை அழைத்து விசாரித்தபோதுதான் மாணவிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தது.

எனவே தனது பெயரில் ஏதோ மோசடி நடந்து உள்ளது. இதற்கு தினகர பிரசாத் காரணமாக இருக்கலாம் என கருதி வல்லம் மகளிர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

அதன்பேரில் பொலிசார் தினகர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top