ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. அந்த இயற்கை சீற்றத்தில்
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள்.
இதற்கு அனுதாபம் தெரிவித்து ஜப்பான் பிரதமருக்கு, நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் மூலம் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
0 கருத்து:
கருத்துரையிடுக