புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள அண்ட்டோய்ன் டெலாஃபோனட் நடுநிலைப் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.30 வயதான அவர் 13, 14 வயதுள்ள மாணவர்களுக்கு தற்கொலை செய்வதற்கு முன் எப்படி கடிதம் எழுதுவாய் என்பதை ஓர் எழுத்துப்பயிற்சியாகக் கொடுத்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பயிற்சி விபரம் வருமாறு, உங்களுக்கு பதினெட்டு வயதாகி விட்டது. உங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள்.

தற்போது நீங்கள் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை எழுதி வைக்க விரும்புகிறீர்கள்.

உங்கள் மீது உங்களுக்கு உண்டான வெறுப்புணர்வால் நீங்கள் விரக்தியடைந்து விட்டீர்கள். இந்த உணர்வு தோன்றியதற்கான காரணத்தையும் அதற்கு உதவிய சில சம்பவங்களையும் நீங்கள் எழுத வேண்டும் என்று எழுத கூறியிருந்தார்.

இந்த எழுத்துப் பயிற்சியை படித்த பெற்றோர்கள் கொதிப்படைந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

நாங்கள் உங்களின் பாடத்திட்டத்தில் குறுக்கிடவில்லை. ஆனாலும் அதற்கு ஒரு எல்லையுண்டு அடுத்ததாக என்ன பயிற்சி தருவீர்கள் துப்பாக்கியால் சுடப்படும் போது ஏற்படும் உணர்வுகளை விவரிக்கவும் என எழுதச் சொல்வீர்களா என்று பெற்றோர்கள் கேட்டனர்.

தற்கொலைக் கடிதம் பற்றிய எழுத்துப்பயிற்சியை பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் ஆசிரியரிடம்(30 வயது) விசாரித்தபோது அவர் ஒன்றும் பதிலளிக்க முன்வரவில்லை என்று மாணவர்கள் கூறினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top