புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்க தனுஷ் தயாரிக்கும் படம் எதிர்நீச்சல். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘கொல வெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் 2 பாடல்களை தனுஷ் எழுதியதோடு மட்டுமல்லாமல் ஒரு குத்துப்பாடலையும் பாடியுள்ளார். 


தனுஷ் பாடிய குத்துப்பாடலுக்கு தனுஷே ஆடினால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்ட இயக்குனர் அவரை குத்தாட்டம் ஆட அழைப்பு விடுத்தார். தனுஷும் அதை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அப்பாடலில் இவருக்கு ஜோடியாக குத்தாட்டம் போட ஒரு பிரபல நடிகையை ஏற்பாடு செய்ய முடிவு எடுத்தனர். 

அதுகுறித்து நயன்தாராவிடம் கேட்டு வந்த நிலையில் முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார். இருவரும் ஆடும் இந்த குத்தாட்ட பாடலுக்கு பிரம்மாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். 

நயன்தாரா ஏற்கெனவே ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கும், ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கும் தனியாக குத்தாட்டம் போட்டுள்ளார். அதன்பிறகு, தற்போது தனுஷுடன் இணைந்து இப்படத்தில் குத்தாட்டம் போடுகிறார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top