கோலிவுட்டில் அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவிக் கொண்டே தான் இருக்கும். அதில் டாப் 5 காதல் கிசுகிசுக்களைப் பார்க்கலாம்.
திரையுலகினர் பற்றி கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. மக்களுக்கும் திரையுலகினர் பற்றிய கிசுகிசுக்களைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். இந்த ஆண்டில் கோலிவுட்டில் பரவிய பல கிசுகிசுக்களில் டாப் 5 காதல் கிசுகிசுக்களைப் பார்ப்போம்
.
ஹன்சிகாவை காதலிக்கும் பிரபுதேவா
நயன்தாராவுடன் காதலில் இருந்தபோதே பிரபுவதேவாவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் என்று கோலிவுட்டில் முணுமுணுத்தனர். நயன் பிரியக் கூட இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆனால் ஹன்சிகாவோ அய்யய்யோ பிரபுதேவா என் அண்ணன் மாதிரி என்று அலறினார். அதன் பிறகு பிரபுதேவா மும்பைக்கு ஜாகையை மாற்றிவிட்டார்.
மீண்டும் சிம்பு, நயன்
பிரபுதேவாவைப் பிரிந்த நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டார். அவர்களிடையே மீண்டும் காதல் துளிர்விட்டுள்ளது என்ற கிசுகிசு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. சரி நயனுக்கும் சிம்பு தான் போல என்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால் அது உண்மையில்லை என்று பின்பு தான் தெரிய வந்தது.
நயன்தாராவின் காதலர் ஆர்யாவாம்
நயன்தாராவின் காதலர் சிம்பு இல்லையாம் ஆர்யாவாம் என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் என்னவோ இதைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. அதன் பிறகு அனைவரும் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டனர்.
தனுஷுக்கும், ஸ்ருதிக்கும் லவ்வோ லவ்
3 படத்தில் நடித்தபோது தனுஷுக்கும், ஸ்ருதிக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. பெவிகால் போட்டு ஒட்டிய மாதிரி இருவரும் உள்ளனர் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் அந்த கிசுகிசு வந்த வேகத்தில் காணாமல் போனது.
நாட்டாமை மகளுக்கும், விஷாலுக்கும் காதலாம்
சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் விஷாலும் காதலிக்கின்றனர். ராதிகா தன் மீது மோசடி வழக்கு போட்டதால் அவரை பழிவாங்க விஷால் வரலட்சுமியை காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவர்கள் பற்றிய பேச்சையே காணோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக