நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1998ம் ஆண்டு சினேகா என்பவர் என் மீது கோடம்பாக்கம் போலீசில் பலாத்கார புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் என் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் செஷன்ஸ் கோர்ட் எனக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ரூ.3.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நான் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதி ரகுபதி விசாரித்து, 2007ம் ஆண்டு என்னை பலாத்கார வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.
சினேகாவின் பொய் புகார் காரணமாக எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது. சினிமா வாய்ப்புகள் பறிபோயின. மன உளைச்சல் ஏற்பட்டது. பொய் புகார் கொடுத்த சினேகா, எனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி மதிவாணன் இன்று விசாரித்து, நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்த்தேன். அவர் நேரில் அளித்த சாட்சியையும் பதிவு செய்தேன். கோர்ட் விசாரணைக்கு சினேகா ஒத்துழைக்கவில்லை. எனவே அவர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடுகிறேன் என்றார். மன்சூர்அலிகான் சார்பாக வக்கீல் ஏ.ஆர்.நிக்சன் ஆஜரானார்.
0 கருத்து:
கருத்துரையிடுக