புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் குப்பிளான் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள், நாய்க்கு நஞ்சுகொடுத்து கொலை செய்ததுடன், வீட்டிலிருந்தவர்களுக்கு மயக்கமருந்தை வீசி பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.


இன்று அதிகாலை வேளையில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அவ்வீட்டில் இருந்த நாய்க்கு சாப்பாட்டில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தின் பின் நாய் இறந்ததும் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களுக்கு மயக்க மருந்தை தெளித்துள்ளனர்.

வீட்டிருந்த அனைவரும் மயக்கமடைந்ததையடுத்து, அங்கிருந்த நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்தபோது வீட்டிருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முறைப்பாட்டில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top