புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிஸ்-சூரிச் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் படித்து வந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர், மாடியின் கண்ணாடிச் சன்னலில் மாட்டிக் கொண்டு மரணமடைந்துள்ளார்.
ஒரு சன்னலுக்கு வெளியே ஒருவரது தலை
தொங்கிக்கிடப்பதைக் கண்டு தெருவில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அறிந்ததும் பொலிஸ் படையும், மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஜன்னலின் கண்ணாடிக்குள் மாட்டிக்கொண்டிருந்த அவரது உடலை எடுத்து மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

மரணத்துக்கான சூழலும், காரணமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top