குடித்துவிட்டு தினமும் டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. அம்பத்தூர் அருகே மேல் அயனம்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் வசித்தவர் ஷியாம் சுந்தர் (50). இவரது சொந்த ஊர் கொல்கத்தா. இவர், அம்பத்தூர் வானகரம் சாலையில் தனியார் கம்பெனியில் காவலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மகன் கிருஷ்ணா காவலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். ஷியாம் சுந்தர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மனைவி, அவரை பல இடங்களில் தேடினார். கிடைக்கவில்லை.
இந்நிலையில், அம்பத் தூர் அடுத்த அத்திப்பட்டு பெரிய காலனி பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ள புதரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக விஏஓ தனஞ்செயன் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்திரசேகர் ஆகியோர் அங்கு விரைந்தனர். சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, அது காணாமல் போன ஷியாம்சுந்தர் என தெரியவந்தது. அவரது கண்ணில் பலத்த காயம் இருந்தது. கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பு இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து ஷியாம் சுந்தரின் மனைவி அலோகா, மகன் கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரித்தனர். அதில், கிருஷ்ணா மீது போலீசா ருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் தீவிரமாக விசாரித்ததில் தந்தையை அடித்து, கழுத்தை பெல் டால் நெரித்து கொன்றதாக அவர் ஒப்பு கொண்டார்.
போலீஸ் விசாரணை யில் கிடைத்த தகவல்கள்: ஷியாம் சுந்தர் குடிப்பழக்கம் உடையவர். தினமும் வேலை முடிந்து குடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார். மனைவி, மகளிடம் தகராறு செய்து அடித்து உதைப்பார். இதனை மகன் கிருஷ்ணா பலமுறை கண்டித்தும் ஷியாம் சுந்தர் கேட்கவில்லை. இதனால் கிருஷ்ணா கடும் ஆத்திரம் அடைந்தார்.
நேற்று முன்தினம் வேலை முடிந்து ஷியாம் சுந்தர் குடித்துவிட்டு வேலை பார்க்கும் கம்பெனிக்கு அருகில் ஒரு காவலாளியிடம் தகராறு செய்வதாக மகன் கிருஷ் ணாவுக்கு தகவல் கிடைத் தது. உடனே கிருஷ்ணா அங்கு சென்றார்.
போதையில் இருந்த ஷியாம் சுந்தரை கண்டித்ததும் அங்கு கிடந்த இரும்பு ராடை எடுத்து மகன் கிருஷ்ணாவை அவர் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணா, ஷியாம் சுந்தரை அடித்து, கைகளை கட்டி ரோட்டில் இழுத்து வந்துள்ளார்.
பின்னர் அத்திப்பட்டு பெரிய காலனியில் உள்ள மைதானத்தில் உள்ள முட்புதரில் போட்டுள்ளார். அங்கு ஷியாம் சுந்தர் அணிந்திருந்த பெல்டால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு வீட்டுக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணாவை கைது செய்து, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக