புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் பாதுக்க பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.


இவ்விபத்து நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை மஹரகம டிபோவுக்கு சொந்தமான பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேகமாக வந்த பஸ் வீதியின் குறுக்கே மாடு ஒன்று செல்ல, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் பாதுக்க, ஹோமாகம மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top