புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா- டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை
தொடர்கிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் கூட பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூரில் உள்ள பொது கழிவறையில் நேற்று மாலை 6 வயது சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுமியை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆபரேசனுக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் அபாய கட்டத்தை தாண்டுவார் என்ற டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுக்குழாயில் எந்த பாதிப்பும் இல்லாததால் உயிர் பிழைத்திருக்கிறாள்.

ஆனால், உடல் முழுவதும் உள் மற்றும் வெளிக்காயங்கள் உள்ளன. எனவே, கழிவறைக்குள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இது உறுதி செய்யப்படும்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொது கழிவறையின் பராமரிப்பாளர் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த கழிவறையின் அருகில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top